1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 மே 2023 (19:41 IST)

எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த துறை? கசிந்த தகவல்..!

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என செய்திகள் வெளியான நிலையில் தற்போது எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த பதவி என்பது குறித்த தகவல் கசிந்து உள்ளது. 
 
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அதேபோல் நிதி மற்றும் மனிதவள மேம்பாடு துறை தங்கம் தென்னரசு அவர்களுக்கு செல்லலாம் என தெரிகிறது. 
 
புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறையும் மனோ தங்கராஜ் அவர்களுக்கு பால்வளத் துறையும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
 
மேலும் ஒரு சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran