செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. சிபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:32 IST)

தமிழகத்தில் கிரிக்கெட் அகாடமியை துவங்கும் சென்னை கிங்ஸ் !

தமிழகத்தில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கவுள்ளதாக  சென்னை கிங்ஸ்  அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலுள்ள ஐபிஎல் அணிகளில் முன்னணி அணியாக உள்ளது. தமிழகத்தை சேர்ந்த  சென்னை சூப்பர் கிங்ஸ். இதன்  நிறுவனரும் நிர்வாக இயக்குநருமாக சீனிவாசன் செயல்பட்டு வருகிறார்.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் சீசங்களில் மொத்தம்  4 முறை சாம்பியன்  பட்டம் வென்றுள்ள சென்னை  கிங்க்ஸுக்கு ரசிகர்கள் உலகளவில் உள்ளனர்.

இந்நிலையில், வரும் ஏப்ரம் மாதம் முதல் தமிழ் நாட்டில் சென்னை மறும் சேலம் பகுதியில் கிரிக்கெட் பயிற்சி அகாடனியை தொடங்கவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது. இந்த அகாடமிக்கு சூப்பர் கிங்க்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் சில இடங்களில் இந்த அகாடமி நிறுவப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.