1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 27 செப்டம்பர் 2021 (10:07 IST)

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூபாய் 5ம், சவரனுக்கு ரூபாய் 40ம் உயர்ந்துள்ளதை அடுத்து இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் இன்று ஒரே நாளில் 5 ரூபாய் உயர்ந்து கிராம் ஒன்றின் விலை ரூபாய் 4369.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 40 உயர்ந்து ரூபாய் 34952.00 என விற்பனையாகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4733.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 37864.00 எனவும் விற்பனையாகி வருகிறது. மேலும் சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூபாய் 64.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 64700.00 எனவும் விற்பனையாகிறது.