1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (08:30 IST)

வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்: மாலை வேட்பாளர் இறுதிப்பட்டியல்..!

Election Commission
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் வாபஸ் பெற்றுக்கொள்ள இன்று கடைசி நாள் என்ற நிலையில் இன்று மாலை ஒவ்வொரு தொகுதிகளிலும் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைந்த நிலையில் 39 தொகுதிகளில் 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட பின்னர் 1085 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் இன்றுடன் வாபஸ் பெரும் நாள் முடிவதால் இன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

அதன் பிறகு வேட்பாளர்களின் சின்னங்களும் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran