வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (11:39 IST)

ஷிண்டேயின் சிவசேனாவில் சேர்ந்த பாலிவுட் நடிகர். 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அரசியல்..!

14 ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பிரபல பாலிவுட் நடிகர் ஷிண்டேயின் சிவசேனா கட்சியில் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த 2004ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபட்டவர் பாலிவுட் நடிகர் கோவிந்தா. இவர் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் தற்போது அவர் ஷிண்டேயின் சிவசேனா கட்சியில் இணைந்து உள்ளார் 
 
 கடந்த 14 ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ஷிண்டேயின் சிவசேனா கட்சியில் சேருமாறு கோவிந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டததாகவும் இதனை அடுத்து மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்து கோவிந்த பேட்டி அளித்த போது 14 ஆண்ட வனவாசத்திற்கு பின்னர் மீண்டும் அரசியலுக்கு வந்து உள்ளேன். பிரதமர் மோடி அவர்கள் நாட்டை வளர்ச்சியான பாதைக்கு கொண்டு செல்கிறார், அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் நடிகர் கோவிந்தா எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கட்சியில் சேர்ந்திருந்தாலும் அவருக்கு வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஷிண்டே கூறியுள்ளார் 
 
 
Edited by Mahendran