இணையத்தில் வைரலாகும் #TNRejectsBJP ஹேஷ்டேக்!

தமிழகம் எப்போதுமே பாஜகவுக்கு எதிராகவே இருக்கும் என்பதை பல நிகழ்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. நீட், ஹைடோர்கார்பன் திட்டம், ஸ்டெர்லைட், காவிரி உள்பட பல விஷயங்களில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளதாகவே கருதப்படுகிறது. அதிமுக கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டுமே பாஜகவுக்கு வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தம் காரணமாக ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவும் பாஜக எதிர்ப்பு கொள்கையையே பெரும்பாலும் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளின் நிலை குறித்த கேட்கவே வேண்டாம். பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் கருப்புக்கொடி காட்டுவதும், கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக்கை தெறிக்க விடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது

இந்த நிலையில் 17வது மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான முடிவை மீண்டும் தமிழக மக்கள் எடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது #என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஒருபக்கம் நாடு முழுவதும் பாஜகவினர் தங்களது வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழக மக்கள் #TNRejectsBJP என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் ஐந்து வருடங்களுக்கு 'கோபேக் மோடி' என்ற கோஷமே தமிழகத்தில் எழும் என்பதால் பாஜகவை பொருத்தவரையில் தமிழகம் எப்போதுமே ஒரு சர்ச்சைக்குரிய மாநிலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :