1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (06:52 IST)

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பம்: கடைசி தேதி அறிவிப்பு..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 
 
இந்த அறிவிப்பின்படி ஜூன் 9ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பர்கள் 12 30 மணி வரை குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 
 
இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி நாள் என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும்  விண்ணப்பங்களை திருத்துவதற்கு மார்ச் 4 முதல் 6 வரை மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 
 
6244 பணியிடங்கள் இருப்பதால் இந்த தேர்வு எழுத விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Siva