வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (13:35 IST)

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 குரூப் 2A தேர்வுகள் தேதி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகியவற்றின் தேர்வுகள் மே 21-ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது 
 
மேலும் இந்த தேர்வு குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப தாரர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 மேலும் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 கடைசி தேதி என்றும், ஜூன் மாதம் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.