ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 மார்ச் 2024 (12:23 IST)

மாநில தன்னாட்சி, நீட் தேர்வு விலக்கு உள்பட முக்கிய அம்சங்கள்: பாமக தேர்தல் அறிக்கை..!

பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளை பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த தேர்தல் அறிக்கை உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
 
• நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உறுதி செய்யப்படும்
 
• அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்படும்
 
• ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை.
 
• மத்திய அரசின் வரி வருவாய் மற்றும் மானியத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கை உயர்த்த நவடடிக்கை எடுக்கப்படும்
 
• காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்
 
• தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம்
 
• மாநில அரசுகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்
 
• தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்
 
• மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்
 
• அரசுத் துறை, பொதுத் துறை பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்
 
edited by Mahendran