1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:21 IST)

அடுத்தாண்டு நடக்க உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை!

அடுத்தாண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அவர்கள் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்
 
இதில் பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் 75 நாட்கள் கழித்து தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் அடுத்த ஆண்டு 32க்கும் அதிகமான தேர்வுகள் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த முழு அட்டவணை இன்னும் சற்று நேரத்தில் ஊடகங்களில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது