செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:01 IST)

அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் பள்ளி மூடப்படுமா..?

தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்தால் பள்ளி மூடப்படுமா என்ற கேள்விக்கு கர்நாடக மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் பதிலளித்துள்ளார்.

 
கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதிலும் தற்போது பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் முதலில் கர்நடக மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது. குறிப்பாக சிக்மகளூர் மாவட்டத்தின் சீகோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து அங்கு பள்ளிகள் மூடப்படுமா என கேள்வி எழுந்தது. இதற்கு கர்நாடக மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்தால் பள்ளி மூடப்படுவது மற்றும் தேர்வுகள் நிறுத்தப்படுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து கர்நாடகா அரசு பின்வாங்காது. 
 
இதுகுறித்து பேசிய கர்நாடக மாநில கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ், தொடர்ந்து நிலைமை மோசமாக சென்றால் தேர்வுகள் நிறுத்தப்படும் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் மூடும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நிலை எழுந்தால் அதிலிருந்து அரசு பின்வாங்காது.
 
சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வந்தால், அதுவே போதுமானதாக இருக்கும். மாநிலம் முழுவதும் ஏற்படும் கொரோனா பாதிப்புகளை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. மாணவர்களின் நிலைமையை நினைத்து பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் என கூறியுள்ளார்.