திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 7 மார்ச் 2018 (18:31 IST)

போதும்டா சாமி; கண்கலங்கிய காவலர் - வைரல் வீடியோ

தமிழக காவலர் ஒருவர் பணிச்சுமை மற்றும் விடுமுறை அளிக்கப்படாத காரணத்தினால் பணியிலிருந்து விலகுவதாக வேதனையுடன் பேசும் வீடியோ வைரலாகி உள்ளது.

 
தமிழகத்தில் இரண்டு காவலர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர் பாரதி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 
 
இந்த வீடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கண் கலங்கி பேசியுள்ளார். மகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விடுமுறை கேட்டேன். விடுமுறை அளிக்கவில்லை. அதனால் வேலை விடுகிறேன். ஊரில் பெட்டி கடை வைத்து பிழைத்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.
 
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.