ஜெயலலிதா நினைவிடத்தில் நடந்த தற்கொலை! அதிர்ச்சியில் சென்னை போலீஸ்
மறைந்த முன்னாள் முதல்வரின் நினைவிடத்தில் மதுரையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மெரினா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு போலீசார் இருக்கும் நிலையில் இன்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அருள் என்ற போலீஸ்காரர் திடீரென தனது கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரையை சேர்ந்த அருள் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சம்பவ இடத்தை பார்வையிட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஜெயலலிதாவின் ஆவி நடமாடி வருவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இந்த தற்கொலை அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.