எந்த படம் முதலில் ரிலீஸ் ஆகும்? அடுத்த சிக்கலில் விஷால்!
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தயாரிப்பாளர்கள், கியூப் நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையேயான மோதலால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டர் அதிபர்களின் வேலை நிறுத்தம் முடிவடைந்த பின்னரும் இது தொடர்கிறது.
தற்போது அனைத்து திரையரங்குகளும் இயங்குகின்றன. ஆனால் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய் அஜீத் நடித்த பழைய படங்கள், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பிறமொழி படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படும்வரை புதிய படங்களை வெளியிடுவது சாத்தியமில்லை என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் உறுதியாக கூறப்பட்டு வருகிறது.
தற்போது நெருங்கி வரும் தமிழ் புத்தாண்டுக்கு படங்கல் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே படம் ரிலீஸ் ஆனாலும் எந்த படம் முதலில் ரிலீஸ் ஆகும் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிரது. இதில் பெரிய ஹிரோக்களின் படங்களும் அடங்கும். இந்நிலையில், தியேட்டர் அதிபர்கள் சிலர் விஷாலை சந்தித்து பேசினர்.
இதையடுத்து பிரச்னையை சுமூகமாக தீர்க்க ஒப்புக்கொள்ளும் தியேட்டர்களில் மட்டும் படங்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், எந்த படத்திர்கு முன்னுரிமை அளிப்பது என்பதில் முடிவெடுக்கும் சிக்கலில் உள்ளார் விஷால்.