செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:16 IST)

அமெரிக்காவை விட கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் வேலுமணி

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இரண்டு நாள் பெய்த மழைக்கே ஆங்காங்கே மழைநீர் தேங்கி பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். சென்னையில் ஒருசில பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.



 
 
இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல அமைச்சர் வேலுமணி அளித்த பேட்டியில் “மழை வெள்ளம் குறித்து அமெரிக்காவை விட கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
 
தமிழகத்தில் தூர்வாறும் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டதாகவும், 2015 மழை வேறு, இப்போது பெய்துவரும் மழை வேறு என்றும் இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் வேலுமணி கூறியுள்ளார்.
 
மேலும் மழை பெய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது நல்ல விஷயம் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.