புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (10:28 IST)

தமிழகத்தில் 5 சுங்கசாவடிகள் அகற்றம்? – மத்திய அமைச்சரை சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலு!

தமிழ்நாட்டில் முன்னதாக 5 சுங்கசாவடிகளின் செயல்பாடு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது சுங்கசாவடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்த நிலையில் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பரனூர், வானகரம், சென்ன சமுத்திரம், சூரபட்டு, நெமிலி ஆகிய பகுதிகளில் உள்ள சுங்க சாவடிகளின் செயல்பாட்டை நிறுத்துவதாக அறிவித்தது. இது வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலு செயல்பாடு நிறுத்தப்பட்ட சுங்க சாவடிகளை அகற்றவும், தமிழகத்தில் உள்ள 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.