1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (16:57 IST)

ஊரடங்கு, முழு ஊரடங்கின்போது என்னென்ன கட்டுப்பாடுகள்?

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை தற்போது பார்ப்போம்.
 
துணிக்கடைகள்/நகைக்கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்;
 
திருமண நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதி
 
ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்வோர் அலுவலக அடையாள அட்டை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்
 
ஞாயிற்றுக்கிழமை உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி.
 
அனைத்து தனியார்/அரசு சார்பில் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது
 
அனைத்து பள்ளிகளிலும், 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை
 
மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி மறுப்பு
 
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாளை முதல் பயிற்சி நிலையங்கள் (Training and coaching centres) செயல்பட தடை
 
அரசு, தனியார், மருத்துவம் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளைத் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு ஜன.20ம் தேதி வரை விடுமுறை
 
அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி
 
சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்
 
இரவு நேர ஊரடங்கின்போது பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி
 
அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது மக்களுக்கு அனுமதி மறுப்பு
 
பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது;
 
மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து போக்குவரத்து தொற்று பாதுகாப்பு நெறிமுறைகளுடன் தொடர அனும
 
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை
 
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பேருந்து, புறநகர் இரயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி
 
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்