செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (17:59 IST)

தமிழகத்தில் பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியா?

தமிழகத்தில் பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பொங்கலன்று ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு கண்டிப்பாக அனுமதி அளிக்கும் என்றே ஜல்லிக்கட்டு வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.