வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (08:04 IST)

பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

பெரம்பலூர் திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று சுமார் 1800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்றும் அதில் பாதிக்குமேல் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனாவுக்கு ஒரு சில விஐபிக்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வெளிவந்த தளபதி பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 இதனை அடுத்து திமுக எம்எல்ஏ பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன