புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (15:05 IST)

ஆசனவாய் காற்றை பாட்டிலில் அடைத்து விற்று சம்பாதித்த பெண்! நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸை சேர்ந்த ஸ்டெபைன் மாட்டோ என்ற பெண் தன்னுடைய ஆசனவாயில் இருந்து பிரியும் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து கல்லா கட்டியுள்ளார்.

பிரான்ஸில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மூலமாக பிரபலமான ஸ்டெபைன் மாட்டோ என்ற 31 வயது நடிகை ஒரு நூதனமான செயலை செய்து அதன் மூலமாக இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இவர் என்ன செய்துள்ளார் என்றால் தன்னுடலில் இருந்து பிரியும் காற்றை ஒரு ஜாரில் அடைத்து அதை விற்பனை செய்து வாரத்துக்கு 50000 அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில் உடலில் இருந்து அதிக அளவில் காற்று பிரிய வேண்டும் என்பதற்காக அதற்கேற்றார் போல தன்னுடைய உணவுமுறையை மாற்றியுள்ளார். இதன் பக்கவிளைவாக சில நாட்களில் அவருக்கு மூச்சுவிடும் போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சத்தில் அவர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது வாயுத்தொல்லையால் ஏற்படும் நெஞ்சுவலி என்று சொல்லி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இனிமேல் விபரீதமான அந்த செயலில் இறங்கமாட்டேன் என ஸ்டெபைன் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஈட்டிய பணத்தின் ஒரு பகுதியை வாயுத்தொல்லையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் விதமாக செலவிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.