எதிர்ப்புகளை தாண்டி நிறைவேறியது ஜெயலலிதா பல்கலை. மசோதா!
தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைகழகத்துடன் இணைக்கும் தீர்மானம் நிறைவேறியது
தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக இது தொடர்பான விவாதத்தில் திமுக ஜெயலலிதா பல்கலைகழகத்தை உள்நோக்கத்துடன் அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதாக கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. மேலும் ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் மெரீனா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டனர்.
இவ்வளவு எதிர்ப்புகளையும் தாண்டி இன்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு அதிமுகவினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.