திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 5 ஜூலை 2023 (19:21 IST)

கலைஞரின் நூற்றாண்டு நூலகம்- ''குறுந்தொகை'' பெயரில் பிழை! வைரல் புகைப்படம்

kalaignar nulagam
தமிழக அரசு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு  விழாவை கொண்டாடி வருகிறது.

கலைஞர் கருணாநிதியின்  நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் பல திட்டங்கள்  மற்றும் நிகழ்ச்சிகளை முதல்வர் முக. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி,  மதுரையில் பிரமாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டுப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை  தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வரும் 15 ஆம்தேதி திறந்து வைக்கவுள்ளார்.

இந்த நூலகம் பல லட்சம் நூல்களுடன் திறப்பு காண தயாராகி வருகிறது.

இந்த நிலையில், இந்த நூலகம் பற்றி வெளியாகியுள்ள ஒரு புகைப்படத்தில்  குறுந்தொகை என்ற  நூலின் பெயரில் பிழை இருப்பதைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.