தொடர்புடைய செய்திகள்
- 5 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- 1 வருடத்திற்கு சென்னை மெரீனா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அனுமதி இல்லை: அதிரடி அறிவிப்பு..!
- தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னை விலை நிலவரம்..!
- இந்தியாவின் டாப் 100 உயர் கல்வி நிறுவனங்கள்: சென்னை ஐஐடி முதலிடம்..!
- சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை: வானிலை அறிவிப்பு..!
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட பாலம்: தமிழக அரசு அரசாணை
சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மூன்றுக்கும் மேற்பட்ட சிக்னகள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூபாய் 621 கோடி பட்ஜெட்டில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது
இந்த உயர்மட்ட பால திட்டத்திற்கு தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்ட பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran
