Daily Horoscope
✕

G-Pay மூலம் 68.32 லட்சம்!.. வட்டாட்சியர் அலுவலகங்களில் சிக்கிய லஞ்சம்!...

Updated: சனி, 18 ஜூலை 2026 (08:17 IST)
தமிழகத்தில் தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. விஜய் முதல்வராக பதவியேற்றவுடன் ‘ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம்’ எனக் கூறியிருந்தார். சட்டசபையில் பேசிய போது ‘மக்கள் பணத்தை யாரையும் தொட விடமாட்டோம்.. தொட்டால் அவர்களை விடமாட்டோம்’ எனக் கூறியிருந்தார்.

சொல்லியது போலவே தமிழக அரசு துறைகளில் உள்ள லஞ்சங்களை ஒழிக்கும் பணியில் அரசு இறங்கியது. யாரும் லஞ்சம் வாங்க கூடாது.. மக்களும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்.. யாராவது லஞ்சம் கேட்டால் என் பெயரை சொல்லுங்கள்’ என்று கரூரில் முதல்வர் விஜய் பேசினார்..

தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக லஞ்சம் ஒழிக்கப்பட்டு வருவது தமிழக மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் இருந்தது போல இப்போது லஞ்சம் இல்லை.. அரசு அலுவலகங்களில் வேலைகள் உடனடியாக நடக்கிறது.. மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது.. பணம் கொடுக்காமலேயே வேலை நடக்கிறது’  என்கிற பேச்சு பரவலாக இருந்திருக்கிறது.

அதேநேரம் பல வருடங்களாக பணம் வாங்கியவர்கள் அதை நிறுத்திவிட்டார்களா என்றால் அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. அப்படி லஞ்சம் வாங்குபவர்கள் ஒவ்வொருவராக சிக்கி வருகிறார்கள்.. சமீபத்தில் கூட தவெக ஊராட்சி மன்ற தலைவர் வீராச்சாமி என்பவர் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி அவரை கட்சியிலிருந்து நீக்கியதுடன் அவர் கைது செய்யப்பட்டார்..

இந்நிலையில்தான், தமிழ்நாடு முழுவதும் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகள் 82 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணம் சிக்கியது. அந்த பணத்தில் G-pay மூலமாக மட்டுமே 68.32 லட்சம் லஞ்சம் வாங்கியிருப்பது அம்பலமாகியிருக்கிறது.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments