ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஜூலை 2023 (12:53 IST)

இந்தி தெரிந்தவர்களை உதயநிதி உடன் வைத்து கொள்ள வேண்டும்: அண்ணாமலை..

திமுகவினர்களை பொருத்தவரை இந்தி யாருக்கும் தெரியாது என்பதால் உதயநிதி போன்ற அமைச்சர்கள் ஹிந்தி தெரிந்தவர்களை உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுரை கூறியுள்ளார்
 
பிரதமர் மோடி 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிற்கும் போடுவதாக பொய் தகவல்களை திமுகவினர் பரப்பி வருகின்றனர் என்று கூறிய அண்ணாமலை பிரதமர் ஹிந்தியில் என்ன கூறினார் என்பது திமுககாரர்களுக்கு புரியாது என்றும் புரியாத காரணத்தினால் தான் அவர்கள் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார் 
 
உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களை உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் என்ன சொல்கிறார் என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran