1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. IT raid in Sasikala in Midas factory also

சசிகலாவின் மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை

sasikala
சசிகலாவும் அவரது குடும்பத்தினர்களும் ஒருகாலத்தில் தமிழ்நாட்டையே கதிகலக்கி கொண்டிருந்த நிலையில் இன்று வருமான வரித்துறை அவரது குடும்பங்களை கதிகலக்கி வருகிறது.



 
 
சசிகலாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் அனைத்து வருமான வரித்துறை வலையத்தில் சிக்கிவிட்ட நிலையில் கடைசியாக சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனத்திற்குள்ளும் வருமான வரித்துறையினர் நுழைந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை என்ற பகுதியில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையில் இருந்துதான் டாஸ்மாக் கடைகளுக்கு பெரும்பாலான சரக்குகள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
உலகையே அதிர செய்த ராட்சத சிலந்தி கோட்டை; விஞ்ஞானிகள் வியப்பு