வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
குழந்தை பெற தகுதி இல்லாதவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் அரசு பெண் ஊழியர் ஒருவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தையை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அறிவிப்பு செய்துள்ளது
இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran