வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 அக்டோபர் 2022 (11:05 IST)

தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை: நியூயார்க் மேயர் அறிவிப்பு

Diwali 1
இந்தியா முழுவதும் தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்தியாவையும் தாண்டி அமெரிக்காவிலும் தீபாவளி அன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க இருப்பதாக நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார் 
 
அடுத்த ஆண்டு முதல் தீபாவளி அன்று அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் குழந்தைகள் தீபத் திருவிழாவை அறியும் நோக்கத்தில் இந்த விடுமுறை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தீபாவளி அன்று விடுமுறை அறிவித்த நியூயார்க் மேயருக்கு இந்திய தூதர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது தீபாவளி அன்று விடுமுறை என்பது இந்திய அமெரிக்க சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது என்றும் அந்த கோரிக்கையை நிறைவேற்றிய நியூயார்க் மேயருக்கு தனது நன்றிகள் என்றும் தெரிவித்துள்ளார்
 
 இதனை அடுத்து அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் பாரம்பரிய தீபாவளியை அனுபவித்துக் கொண்டு முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva