டீக்கடைகளுக்கும் அனுமதி.. மேலும் சில தளர்வுகள்! – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை முதல் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக நாளை முதல் அமலுக்கு வர உள்ள தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ள தமிழக அரசு பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேநீர் கடைகள் இயங்கலாம் என தெரிவித்துள்ளது. ஆனால் கடைகளில் நின்று தேநீர் அருந்த அனுமதி கிடையாது என்றும், பார்சல் மட்டும் வாங்கி செல்ல அனுமதி உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது.
அதுபோல திண்பண்டங்கள், இனிப்பு, காரவகைகள் விற்கும் கடைகள், இ சேவை மையங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.