1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Election date announced in Tamil Nadu

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு…

Election date announced
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடக்கும் என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தவில்லை என தெரிவித்து அதிமுக மீது குற்றம்சாட்டடினார்.

இன்று சென்னையில் அமைச்சர் கேன்.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் ஊரடக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனவும் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றச்சாட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
டேனிஷ் சித்திக்கி கொலைக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை- தாலிபான்கள்!