1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Governor meet online game persons?

ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆளுனரை சந்தித்தார்களா?

Governor
தமிழக அரசின் ஆன்லைன் விளையாட்டு தடை மசோதாவுக்கு கவர்னர் இன்னும் கையெழுத்திடாத நிலையில் ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கவர்னரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. சமீபத்தில்கூட சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை சந்தித்து இது குறித்து கோரிக்கை விடுத்தார். 
 
இந்த நிலையில்ஆளுநர் ரவியை கடந்த ஐந்தாம் தேதி ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் இதுகுறித்து ஆளுநர் மாளிகை எந்தவித செய்திக்குறிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னை மேயரை சந்தித்த அமெரிக்க மேயர்: முக்கிய பேச்சுவார்த்தை