திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (19:10 IST)

ஆன்லைனின் ரம்மி விளையாட்டில் பணம் இழந்தவர் தற்கொலை!

புதுச்சேரி    யூனியனில் உள்ள கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி ஆன்லைனில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி    யூனியனில் உள்ள கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி. இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இவர்  நேற்று நடைப்பயிற்சி சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த அவரது மனைவி போலீசில் புகாரளித்தார்.

இதுகுறித்து, போலீஸார் விசாரித்த நிலையில்,  அவர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி ரூ. 7 லட்சம் வரை பலரிடமிருந்து கடன் பெற்றதும், அந்தக் கடனை அடைக்க முடியாததால்,அவர்  மன உளைச்சலில் இருந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj