தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் டெல்லி பயணம்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீரென டெல்லி பயணம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க காலதாமதம் செய்வது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு கிளை சமீபத்தில் அவருக்கு அதிருப்தி தெரிவித்தது என்பது தெரிந்ததே. அதன் பின்னர் அந்த மசோதாவில் கையெழுத்திட்டார்
அதேபோல் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்திலும் இரண்டு ஆண்டுகளாக கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் நேற்று பதிவு செய்த வழக்கு ஒன்றில் கவர்னருக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென டெல்லி பயணம் செய்துள்ளார் டெல்லியில் அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன