1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (08:28 IST)

ட்ரம்ப் திரும்பவும் அதிபர் ஆகணும்! – இந்துசேனா டெல்லியில் ஸ்பெஷல் பூஜை!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் மீண்டும் அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்க வேண்டும் என இந்துசேனா அமைப்பினர் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பிடௌம் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிபராக மீண்டும் ட்ரம்ப்பே வர வேண்டும் என டெல்லியில் இந்துசேனா அமைப்பினர் சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய கிழக்கு டெல்லியில் உள்ள கோவில் அர்ச்சகர் வேத் சாஸ்த்ரி “இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த உலகின் ஒரே தலைவர் அதிபர் ட்ரம்ப்தான். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உலகம் அவருக்கு ஆதரவளிக்க வேண்டிய நேரம் இது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல தமிழகத்தில் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.