இனி அரசு அலுவலகங்கள் 5 நாட்கள் மட்டும் இயங்கும் – தமிழக அரசு
தமிழக அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பல துறை சார்ந்த அலுவலகங்கள் வாரத்தில் 6 நாட்கள் இயங்கி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக அரசு அலுவலகங்கள் சில காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது குறைந்த பணியாளர்களோடு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021ம் ஆண்டு ஜனவரி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீதம் ஊழியகளோடு செயல்படும். மேலும் வார விடுமுறை நாட்கள் 2 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.