திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 அக்டோபர் 2020 (14:27 IST)

சிறிய கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் வட்டிக்கு வட்டி கிடையாது! – மத்திய அரசு அறிவிப்பு!

சிறிய அளவிலான கடன் பெற்று கொரோனா காலத்தில் கட்டாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் வங்கி கடனை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் வங்கிகள் கடன் தொகைக்கு வட்டிக்கு வட்டி விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து தீர்ப்பும் அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து 2 கோடிக்கு உள்ளிட்ட அளவில் சிறிய அளவிலான கடன்களை பெற்றவர்கள் கொரோனா காலத்தில் கட்டாத தொகைக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வீட்டுக்கடன், வாகன கடன், கல்வி கடன் உள்ளிட்ட கடன்களுக்கு இந்த உத்தரவு செல்லும் என கூறப்பட்டுள்ளது.