தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? இன்று வாக்கு எண்ணிக்கை
தமிழ்க சட்டசபைக்கான தேர்தல் வாக்குப் பதிவு கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்றது. கிட்டத்தட்ட 85% வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குக்ள் இன்று எண்ணப்பட உள்ளன.
இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் விஜயின் தவெக தாக்கமே. திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது அதிமுக ஆட்சியை கைப்பற்றுமா அல்லது விஜயின் தவெக அட்சியை கைப்பற்றுமா என்பது இன்று தெரிந்துவிடும்.
இந்த நிலையில் இன்று கலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்கு எண்ணும் பணியாளர்கள், வேட்பாளகள் அல்லது அவர்களின் முகவர்கள் உட்பட அனைவரும் வந்துள்ளன. அவர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

