தொடர்புடைய செய்திகள்
- 1 லட்சமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- ஊரடங்கில் தளர்வுகள்; இ-பதிவு முறையில் மாற்றம்! – யார் யாருக்கு அனுமதி!
- அஸ்வின் என் ஆல்டைம் பேவரைட் இல்லை… சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சை!
- ராஜமௌலி இயக்கும் குறும்படம்… யாரைப் பற்றி தெரியுமா?
- மருமகனுக்கு கட்சியில் உயர்பதவி… மம்தா மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டு!
ஊரடங்கில் தளர்வுகள்; இ-பதிவு செய்ய குவிந்த மக்கள்! – முடங்கியது இணையதளம்!
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் பலர் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க ஒரே சமயத்தில் நுழைந்ததால் இணையதளம் முடங்கியது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இ-பதிவு முறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு வேலைக்கு செல்லவும் இ-பதிவில் பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், ப்ளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்டோர் இ-பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இ-பாஸ் பெற ஒரே சமயத்தில் பலர் விண்ணப்பிக்க முயற்சித்ததால் இ-பதிவு இணையதளம் முடங்கியுள்ளது. இணையதளம் மீண்டும் சில மணி நேரங்களில் செயல்பட தொடங்கும் என கூறப்படும் நிலையில் பலரும் இ-பாஸ் பெற காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
