வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (09:42 IST)

அதிக எதிர்ப்பு சக்தி தருவது கோவிஷீல்டா? கோவாக்சினா? – ஆய்வில் தகவல்!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசியாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிக எதிர்ப்புசக்தி அளிப்பது எது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் குறித்து நடத்திய ஆய்வில் இரண்டு டோஸ்களிலும் கோவாக்சினை விட கோவிஷீல்டு அதிகமான எதிர்ப்புதிறனை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நோய் எதிர்ப்பு செல் திறனில் கோவிஷீல்டு அதிக திறன் கொண்டிருந்தாலும், கொரோனா தொற்றை தடுப்பதில் கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டுமே சிறப்பாக செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.