தாக்கப்பட்ட எஸ்.ஐ - போனில் நலம் விசாரித்தார் முதல்வர்!
நெல்லையில் தாக்கப்பட்ட எஸ்.ஐ. மார்க்ரெட் தெரசாவிடம் போனில் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நெல்லை சம்பவம்:
திருநெல்வேலியை அடுத்த பழவூர் கிராமத்தில் நடிபெற்ற கோயில் திருவிழாவிற்கு போலீஸார் பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது. அதில் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசாவும் இருந்தார். இந்நிலையில் திருவிழா அன்று இரவு ஆறுமுகம் என்பவர் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
ஆம், கடந்த மாதம் தனக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்தது குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்ற்வே ஆறுமுகம் உதவி காவல் ஆய்வாளர் மார்க்கெட் தெரசாவை கழுத்தில் அறுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆறுமுகத்தை காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்:
நெல்லையில் தாக்கப்பட்ட எஸ்.ஐ. மார்க்ரெட் தெரசாவிடம் போனில் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.