புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:38 IST)

ஆபாச வீடியோ.. ஐ லவ் யூ மெஸேஜ்…. புலம்பித் தள்ளிய நடிகரின் மனைவி!

நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி பகிர்ந்துள்ள சமூகவலைதளப் பதிவு இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நாள் தோழியை காதலித்து திருமணம் செய்தார் நகுல். அந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தற்போது ஸ்ருதி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனக்கு ஒரு மர்மநபர் ஆபாச வீடியோக்களை அனுப்பி அதனுடன் ஐ லவ் யூ என மெஸேஜும் அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இதுபோல ஆபாச வீடியோக்கள் வருவது இது முதல் முறை இல்லை என்றும் கூறியுள்ளார்.