1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2020 (11:17 IST)

தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார் கமலா ஹாரிஸ்” - முதல்வர் பழனிசாமி

தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார் கமலா ஹாரிஸ்”
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றதாகவும் துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வரும் ஜனவரி மாதம் பதவி ஏற்க உள்ளனர் 
 
இந்த நிலையில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரீஸ் ஆகிய இருவருக்கும் உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜோபைடன் மற்றும் கமலா ஹாரீஸ் ஆகியோர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோபைடனுக்கு வாழ்த்துக்கள் என்றும் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறிய முதல்வர், இந்த வெற்றியால் அவர் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தி உள்ளார் என்று கூறியுள்ளார்