திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2020 (07:47 IST)

ஜோபைடன், கமலாஹாரீஸ் டுவிட்டர் பக்கங்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

ஜோபைடன், கமலாஹாரீஸ் டுவிட்டர் பக்கங்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்களும், துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் அவர்களூம் வெற்றி பெற்றதாக நேற்றிரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் வரும் ஜனவரி மாதம் தங்களது பதவியை ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களான ஜோபைடன், கமலாஹாரீஸ் ஆகிய இருவரின் டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் மற்றும் அமெரிக்காவின் அடுத்த துணை அதிபர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேலும் அதிபர் ஜோபைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் டிரம்புக்கு வாக்களித்தவர்களும் அமெரிக்கர்கள்தான் என்றும் அனைவருக்குமான அதிபராக தான் இருப்பேன் என்றும் ஜோபைடன் கூறியுள்ளார். வெற்றி பெற்ற இருவருக்கும் டுவிட்டர் மூலம் அமெரிக்க பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்