1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (14:29 IST)

டிரம்பின் நட்பு கோவிந்தா: திடீரென ஜோபைடனுடன் நெருக்கமான மோடி!

டிரம்பின் நட்பு கோவிந்தா: திடீரென ஜோபைடனுடன் நெருக்கமான மோடி!
அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப்புடன் நெருங்கிய நட்புடன் இருந்ததாக பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் தற்போது அவர் தோல்வி அடையும் நிலையில் இருப்பதாலும், ஜோ பைடன் வெற்றி அடையும் நிலையிலும் இருப்பதாலும் டிரம்ப்பின் நட்பை முறித்துவிட்டு ஜோபைடனும் நட்பை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது
 
ஜோ பைடன் அமெரிக்க அதிபராகவும், கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராகவும் பதவியேற்றால் இந்தியாவுக்கு சாதகமாக பல்வேறு காய்கள் நகர்த்த இந்திய திட்டமிட்டு வருகிறார். துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியாவுக்கு சாதகமாக அவரை மாற்ற மோடி அரசு முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு எதிராக கமலா ஹாரிஸ் குரல் கொடுத்து இருந்தார் என்பதும் இருப்பினும் அவரை பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்த மோடியின் தரப்பினர் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் ஜோபைடனுக்கு கீழ் வேலை பார்க்கும் முக்கிய அதிகாரிகள் இருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர்கள் இருவரும் ஏற்கனவே இந்திய அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இந்திய-அமெரிக்க நட்பு பலப்படும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் டிரம்ப் உடனான நட்பு முடிவுக்கு வருவதாகவும் பிரதமர் மோடியின் புதிய நண்பராக ஜோ பைடன் இருப்பார் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.