குரங்கணி காட்டுத்தீ விபத்து; நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் பலி எண்ணிக்கை
குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஏற்கனவே 16 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த ஒருவர் பலியாகியிருப்பதால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையை சேர்ந்த 27 பேரும், ஈரோட்டை சேர்ந்த 12 பேரும் இரு பிரிவுகளாக மொத்தம் 39 பேர் மலையேற சென்றனர். அப்போது அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயில் கருகி 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிய நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 16 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதன் மூலம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.