வரிவிதிப்பில் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் ஏராளமாக வரிவிதிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் உலக நாடுகளுடனான வணிகம், நட்புறவில் பல மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்கப் பொருட்களுக்கு பிற நாடுகளில் அதிகமாக வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட நாடுகளை குறிப்பிட்டு பேசினார்.
இந்நிலையில் கனடா, அமெரிக்கா இடையே ஏற்பட்ட வர்த்தக மோதலால் கனடாவில் அமெரிக்க பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் பேசுகையில், அதிபர் ட்ரம்ப் சமநிலையான நியாயமான வரத்தக நடைமுறை வரவேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளார்.
கனடாவில் அமெரிக்க பொருட்களான வெண்ணெய் முதலியவற்றிற்கு 300 சதவீதம் வரை வரி விதிக்கின்றனர். இந்தியாவில் அமெரிக்க மதுபான ரகங்களுக்கு 150 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. ஜப்பானில் அரிசிக்கு 700 சதவீதம் வரி. உலக சமூகம் தொடர்ந்து பல காலமாக அமெரிக்காவை ஏமாற்றி வருகிறது என அவர் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K