1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Karunanidhi visits to arivalayam

திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்துக்கு திடீர் வருகை

தமிழகம்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று அண்ணா அறிவாலயத்துக்கு  திடீரென வருகை தந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நல்லமுறையில் தேறி வருவதாகவும், அவர் இன்னும் சில நாட்களில் பேசிவிடுவார் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் கருணாநிதி கோபாலபுரம் வீட்டில் இருந்து புறப்பட்டு, நேற்று இரவு 8.40 மணிக்கு அறிவாலயத்துக்கு சென்றார். அறிவாலயத்தில் உள்ள தன்னுடைய அறைக்கு சென்று அங்கு 10 நிமிடம் இருந்தார். தன் அறையை பார்த்ததும் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார் கருணாநிதி. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றார். 
அடுத்த கட்டுரையில்
மம்தா-சந்திரசேகரராவ் இன்று சந்திப்பு: 3வது அணிக்கு அச்சாரமா?