வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 மார்ச் 2018 (14:32 IST)

குரங்கணி காட்டுத்தீ: பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய கமல்

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்ற சுமார் 36 பேர் காட்டுத்தீயில் சிக்கிய நிலையில் அவர்களில் 16 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த நிஷா, அனுவித்யா ஆகியோர் சமீபத்தில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். சென்னையை சேர்ந்த அனுவித்யா மற்றும் நிஷாவின் ஆகிய இருவரின் வீடுகளுக்கும் நேரில் சென்ற நடிகர் கமல்ஹாசன் அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் கூறிய கமல், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.