திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 13 நவம்பர் 2018 (12:11 IST)

குடி போதையில் போலிஸ் கேண்டின் பூட்டை உடைத்த போலிஸ் –வேலியேப் பயிரை மேய்ந்தது!

சமீபகாலமாக காவல்துறையினர் தங்கள் கடமைகளில் இருந்து மீறி ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகியுள்ளது. அந்த மாதிரி ஒரு விரும்பத்தாகாத சம்பவம் சம்பவம் தற்போது விழுப்புரத்தில் நடந்தேறியுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த சத்தியராஜ், விழுப்புரம் ஆயுதக்காவல் படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சத்தியராஜ் . இன்று அதீத குடிபோதையில் காகுப்பம் பகுதியில் உள்ள போலிஸ் கேண்டீன் பூட்டை உடைத்துள்ளார். அதைத் தட்டிக் கேட்டவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரை ஏற்று விசாரித்த எஸ் பி ஜெயக்குமார் காவலர் சத்தியராஜுவைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில்தான் விழுப்புரம் ஆயுதக்காவல் பிரிவைச் சேர்ந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன் காதலியையும் சுட்டுக் கொன்று விட்டு தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.