நான் ஸ்கூல் படிக்கும் போதிலிருந்து இதைத்தான் சொல்கிறார்: ரஜினியை மீண்டும் வம்புக்கு இழுத்த உதயநிதி!

நான் ஸ்கூல் படிக்கும் போதிலிருந்து இதைத்தான் சொல்கிறார்
Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (16:10 IST)
நான் ஸ்கூல் படிக்கும் போதிலிருந்து இதைத்தான் சொல்கிறார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும், பேட்டிக்கும் திமுகவின் முன்னணி தலைவர்கள் கூட பதில் சொல்லாமல் மௌனம் காக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் அரசியலுக்குள் நுழைந்து ஒரு சில மாதங்களிலேயே திமுக இளைஞரணி செயலாளர் பதவியைப் பெற்று விட்ட உதயநிதி ஸ்டாலின், அவ்வப்போது ரஜினியை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போதும், துக்ளக் விழாவில் ரஜினி பேசிய போதும், சிஏஏ சட்டத்தை ரஜினி ஆதரித்து பேட்டி கொடுத்த போதும் தனது டுவிட்டர் தளத்தில் ரஜினியை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின் தற்போது வடலூரில் நடைபெற்ற திமுக விழாவில் கலந்து கொண்ட போதும் மீண்டும் ரஜினியை விமர்சனம் செய்துள்ளார்.
நான் பள்ளியில் படிக்கும்போது காலத்திலிருந்தே நடிகர் ஒருவர் அரசியலுக்கு வரப் போவதாக கூறி இருப்பதாகவும், இன்று வரை அவர் அரசியலுக்கு வரவில்லை என்றும், அப்படி அவர் அரசியலுக்கு வந்தாலும் அவரது அரசியல் வருகை குறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட முன்னணி தலைவர்கள் ரஜினியை விமர்சிக்காத நிலையில் உதயநிதி மட்டும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :